சிறுநீர், மலத்தால் மாசடைந்த வீட்டில் இருந்து 84 நாய்கள் மீட்பு

காணொளிக் குறிப்பு,
சிறுநீர், மலத்தால் மாசடைந்த வீட்டில் இருந்து 84 நாய்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனின் தெற்கு யார்க்ஷையரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட பல நாய்கள் சரியாக பராமரிக்கப்படாமலும், உடல் எடை குறைந்த நிலையிலும் இருந்தன. சில நாய்களுக்கு தொற்றடைந்த காயங்களும், ஒரு நாய்க்கு கால் முறிவும் இருந்தது.

பொதுமக்களில் ஒருவர் இதுகுறித்து கவலை தெரிவித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நாய்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கிறது. 61 வயதுடைய ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

நாய்களின் நலனை உறுதி செய்யத் தவறியதாக அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியும் மகனும் இதே குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். மூவருக்கும் டிசம்பர் மாதத்தில் தண்டனை விதிக்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட நாய்கள் அனைத்தும் புதிய குடும்பங்களில் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு