உதிரும் இலை முதல் பொழியும் மழை வரை: மனதை மயக்கும் ஸ்காட்லாந்து (புகைப்படத் தொகுப்பு)

பிரசுரிக்கப்பட்டது

சிறிய தும்பி முதல் பெரிய திமிங்கலம் வரை ஸ்காட்லாந்தில் உள்ள பிபிசி நேயர்கள் எடுத்த புகைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு.

ஐஸ்ல் ஆஃப் எக் தீவில் உள்ள சிங்கிங் சேண்ட்ஸ் பகுதிக்கு அருகே உள்ள பாறைகள்.
படக்குறிப்பு, ஐஸ்ல் ஆஃப் எக் தீவில் உள்ள சிங்கிங் சேண்ட்ஸ் பகுதிக்கு அருகே உள்ள பாறைகள்.
மாய முத்தத்தை வழங்க ஒப்புக்கொண்ட காக்கர் ஸ்பானியல்
படக்குறிப்பு, தி கெல்பீஸ் எனும் இடத்தில் கொஞ்சம் பொறுமையுடனும், நிறைய விருந்துக்குப் பின்னரும் இந்த மாய முத்தத்தை வழங்க ஒப்புக்கொண்ட காக்கர் ஸ்பானியல் ரக நாயான டெய்சி.
ஸ்கை
படக்குறிப்பு, ஸ்கை பகுதியில் இருக்கும் நெல்சன் பாய்ண்ட் எனும் இடத்தில் இருக்கும் கலங்கரை விளக்கம். 'ஸ்கை எப்போதுமே மாயம் செய்யக்கூடியது,' என்கிறார் புகைப்படக்கலைஞர் ஸ்டீஃபன் டோசெர்த்தி.
திமிங்கலம்
படக்குறிப்பு, ஸ்கை கடற்கரைப் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் கடலில் நீந்தும் ஒரு பைலட் வகைத் திமிங்கலம். கெய்ர்லார்ச் அருகே ஹெப்ரீடியன் வகை திமிங்கலங்களைப் பார்க்க ஒரு படகுப் பயணம் மேற்கொண்டபோது அமல்டா டெய்லர் இதைப் படம் பிடித்தார்.
லாச் ஃபாஸ்கல்லி நீர்த்தேக்கம்
படக்குறிப்பு, லின் ஆஃப் டம்மல் அருகே நடந்து சென்றபோது, லாச் ஃபாஸ்கல்லி நீர்த்தேக்கம் வானையும் மரங்களையும் பிரதிபலிப்பதை தன் இன்ஸ்டாகிராமில் படம் பிடித்தார் ஜென் வில்சன்.
தும்பி
படக்குறிப்பு, பென்டர்லாக்கில் இலையுதிர்கால வண்ணங்களின் இடையேவும் இந்தத் தும்பியைக் கண்டு படம் பிடித்தார் டொனால்டு சிஸ்ஹோல்ம்.
மோரே பகுதியில் உள்ள ஹோப்மேன் கடற்க்கரைக்கு அருகே நள்ளிரவு வருவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு இந்த இரவு வானத்தைப் படம் பிடித்தார் ஆலன் டஃப்.
படக்குறிப்பு, மோரே பகுதியில் உள்ள ஹோப்மேன் கடற்க்கரைக்கு அருகே நள்ளிரவு வருவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு இந்த இரவு வானத்தைப் படம் பிடித்தார் ஆலன் டஃப்.
பட்டாம்பூச்சி
படக்குறிப்பு, பிராக்ஸ்பர்னில் உள்ள ஸ்டூவர்ட் கண்ணிங்ஹாமின் வீட்டுச் சமயலறைக் கண்ணாடியின் மீது ஓய்வெடுக்கும் பட்டாம்பூச்சி.
இலையுதிர் காலம்
படக்குறிப்பு, ஓபனில் இலையுதிர் காலம் வந்துவிட்டதன் ஆதாரத்தை புகைப்படமாகப் பதிவு செய்துள்ளார் ஜேனட் மேக்லியொட்.
ஃபைரிஷ் நினைவுச் சின்னம்.
படக்குறிப்பு, எவண்டோன் கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள ஃபைரிஷ் நினைவுச் சின்னம்.
பேராக்ளைடிங்
படக்குறிப்பு, எற்றிக் பள்ளத்தாக்குக்கு மேலே பேராக்ளைடிங் செய்வதற்கு ஏற்ற ஒரு அருமையான தருணம்.
அபெர்தீன்ஷயர் பகுதியில் சிவப்பு அணில்களைக் காண்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார் கோலின் பிளேக்.
படக்குறிப்பு, அபெர்தீன்ஷயர் பகுதியில் சிவப்பு அணில்களைக் காண்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார் கோலின் பிளேக்.
ஸ்காட்லாந்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேக் பொல்லைத் பகுதியை தனது டிரோன் மூலம் படம் பிடித்துள்ளார் பிலிப் மர்ரி.
படக்குறிப்பு, ஸ்காட்லாந்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேக் பொல்லைத் பகுதியை தனது டிரோன் மூலம் படம் பிடித்துள்ளார் பிலிப் மர்ரி.
'கேட்ஜட் கிரேன்ட்பா'
படக்குறிப்பு, 'கேட்ஜட் கிரேன்ட்பா' என்று அழைக்கப்படும் அலிஸ்டர் ஸ்டீஃபன்சன் தான் செய்த 'ராக்கெட் ரயிலை' தனது பேரக்குழந்தைகளுக்கு இயக்கிக்காட்ட முயல்கிறார்.
கிர்கில் இவர்னஸ் பகுதியில் கடும் மழைபொழிவுக்குப் பின்னர் நடந்து சென்றபோது, இந்தப் பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பிற புல்களைப் படம் பிடித்தார் டேவிட் கென்ட்.
படக்குறிப்பு, கிர்கில் இவர்னஸ் பகுதியில் கடும் மழைபொழிவுக்குப் பின்னர் நடந்து சென்றபோது, இந்தப் பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பிற புல்களைப் படம் பிடித்தார் டேவிட் கென்ட்.
கிலென்கோ பகுதியில் மலைகளுடன் உறவாடும் மேகங்களை படமாக பதிவு செய்துள்ளார் டையான் மெக்கார்த்தி.
படக்குறிப்பு, கிலென்கோ பகுதியில் மலைகளுடன் உறவாடும் மேகங்களை படமாக பதிவு செய்துள்ளார் டையான் மெக்கார்த்தி.

எல்லாப் படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :