காணொளி: கால்பந்து வீரர்கள் 'ஸ்மார்ட் வெஸ்ட்' எனும் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது ஏன்?
கால்பந்து வீரர்கள் தங்களது ஜெர்சிக்குக் கீழே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை 'ஸ்மார்ட் வெஸ்ட்' என்று அழைக்கப்படுகின்றன.
போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டுகளில் இந்த தொழில்நுட்பம் புதியதல்ல என்றபோதிலும் பலரும் இவற்றை முதன்முறையாகப் பார்க்கின்றனர்.
ஸ்மார்ட் வெஸ்ட்கள் என்பவை ஒரு வகையான தொழில்நுட்பம் வாய்ந்தவையாகும்.
நேமர் போன்ற வீரர்கள் இவற்றைப் பயன்படுத்தி, அவர்களின் ஓட்ட வேகம், இதயத் துடிப்பு, சோர்வு நிலை, காயத்திலிருந்து மீளுதல் உள்ளிட்ட பல தகவல்களைப் பதிவு செய்கின்றனர்.
இந்தத் தகவல்கள் மூலம் யார் போட்டிக்குத் தயாராக இருக்கிறார்கள், யாருக்கு கூடுதல் ஓய்வு தேவை என்பதை பயிற்சியாளர்கள் முடிவு செய்கின்றனர்.
வீரர்களைப் பற்றிய இந்த கூடுதல் தரவுகள், அணியின் செயல்திறனை மேம்படுத்தி, போட்டியில் வெல்லும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அணிகள் நம்புகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



