குழந்தை திருமணத்தை எதிர்க்கும் உலகின் மூன்று பிரபல பெண்கள்
குழந்தை திருமணத்தை எதிர்க்கும் உலகின் மூன்று பிரபல பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
உலகம் முழுவதுமிருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இதில் மனித உரிமை வழக்கறிஞர் அமல் குளூனி,முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, புரவலர் மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட மூன்று பெண்களும் உலகில் குழந்தை திருமணத்தை எதிர்த்து செயல்பட ஒன்றாக இணைந்துள்ளனர். ஒரு தலைமுறைக்குள் குழந்தை திருமணத்தை ஒழிக்க முடியும் என்றும் அதற்கான உத்திகளும் குறித்தும் பிபிசி 100க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



