காணொளி: யுக்ரேனில் சக்கர நாற்காலியில் விருது பெற வந்த காவல்துறை அதிகாரி

காணொளிக் குறிப்பு, யுக்ரேனில் சக்கர நாற்காலியில் விருது பெற வந்த காவல்துறை அதிகாரி.
காணொளி: யுக்ரேனில் சக்கர நாற்காலியில் விருது பெற வந்த காவல்துறை அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் சுதந்திர தினத்தையொட்டி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் காவல்துறை அதிகாரி ஒருவரும் நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சக்கர நாற்காலியில் விருது பெற வந்த காவல்துறை அதிகாரி செர்ஹி பான்ஃபிலோவ், அதிபர் ஜெலென்ஸ்கியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டார்.ஜெலென்ஸ்கியும் சம்மதித்தார். ஆனால், தன்னிடம் மொபைல் போன் இல்லை என பான்ஃபிலோவ் கூறியதும், ஜெலென்ஸ்கி தனது உதவியாளரிடம் இருந்து மொபைல் போனை வாங்கினார்.

பின்னர் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு