காஸாவில் காணாமல் போன உறவுகளின் நிலை தெரியாமல் பரிதவிக்கும் குடும்பங்கள்
காஸாவில் காணாமல் போன உறவுகளின் நிலை தெரியாமல் பரிதவிக்கும் குடும்பங்கள்
பிரசுரிக்கப்பட்டது
அஹ்மத் அல் மதூன், காஸாவில் கடந்த மே மாதம் உயிருடன் காணப்பட்டபோது அவருக்கு வயது 21. அவர் அனைவருக்கும் பிடித்தமான, கலகலப்பானவர் என்கின்றனர் குடும்பத்தினர்.
டவுன் சிண்ட்ரோம் கொண்ட அஹ்மத், அருகில் இருந்த கடைக்குச் சென்ற பிறகு காணாமல் போனார். காஸாவில் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்படுகின்றன.
ஐடா அல்-ட்ரிம்லியின் மகன் மஹ்மூத் 2024இல் காணாமல் போனார். ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், இரு இஸ்ரேலிய வீரர்களுடன் பாலத்தீன கைதியாக மஹ்மூத் இருப்பதாக அவரது குடும்பம் நம்புகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



