You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: விண்வெளியில் உள்ள ஆர்டெமிஸ்-2 குழுவுடன் டிரம்ப் பேசியது என்ன?
நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழுவினர் நிலவைச் சுற்றும் தங்களின் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுடன் பேசினார்.
"ஆர்டெமிஸ் II-க்கு சிறப்பு ஹலோ. இன்று நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்; அமெரிக்காவை மிகவும் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். சமீபத்தில் நமக்கு பெருமைப்பட பல விஷயங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் செய்கிற இந்த செயல் போல ஒன்றும் இல்லை. கடந்த அரை நூற்றாண்டில், முதல் முறையாக நிலவை சுற்றி வருகிறீர்கள்.
மேலும் பூமியிலிருந்து மிகவும் தூரம் சென்ற சாதனையை முறியடித்துள்ளீர்கள். தனிப்பட்ட முறையில் கமாண்டர் ரீட் வைஸ்மனை பாராட்ட விரும்புகிறேன். பைலட் விக்டர் குளோவர், மிஷன் ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெரெமி ஹான்சனையும் பாராட்டுகிறேன்.
நாசாவில் உள்ள அற்புதமான குழுவுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதை வழிநடத்தும் மிகச் சிறந்த நபர் ஜாரெட்டுக்கும் நன்றி. சிறப்பு. நான் எதிர்பார்த்து இருக்கிறேன். நான் உங்களை ஓவல் அலுவலகத்தில் (வெள்ளை மாளிகை) சந்திக்க ஆவலாக இருக்கிறேன்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு