காணொளி: கனரக இயந்திரத்தில் ஏறி ஓடையை கடக்கும் பெண்கள்
காணொளி: கனரக இயந்திரத்தில் ஏறி ஓடையை கடக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
மலைப் பகுதிகளில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அதைக் கடப்பதற்காக பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி பகுதியில் நடந்த சம்பவம் இது.
இங்குள்ள நௌகான் வட்டத்தில், குப்டா–குன்ஷாலா–திரிகிலி சாலையில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால், கிராம மக்கள் அன்றாடப் பயணத்திற்காக உயிரைப் பணயம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கனரக இயந்திரத்தில் அமர்ந்தபடியே பெருக்கெடுத்து ஓடும் ஓடைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



