பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பற்றிய விமர்சனமும் பதிலும்

காணொளிக் குறிப்பு, திமுக உறுப்பினர் ஆஸ்டின் குறித்த விமர்சனமும், பதிலும்
பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பற்றிய விமர்சனமும் பதிலும்
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் பேசும்போது, தவெக அமைச்சர்கள் பதில் கூறும்போது பயன்படுத்தும் சில வார்த்தை திமுகவினரின் உணர்வுகளை தூண்டும்விதமாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது எழுந்த அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுகவின் ஆஸ்டின் கடந்த காலங்களில் பல கட்சிகள் மாறியவர் என பேசினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தவெக உறுப்பினர்கள் பேசும்போது ஆஸ்டின் அடிக்கடி குறுக்கிடுவார் எனவும் இனிமேல் குறுக்கிடாமல் இருப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இனி ஆஸ்டின் அடிக்கடி குறுக்கிடுவார் என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு