காணொளி: தவெக எம்எல்ஏவிடம் 35 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு - திமுக கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, தவெக எம்எல்ஏவிடம் 35 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு - திமுக கூறுவது என்ன?
காணொளி: தவெக எம்எல்ஏவிடம் 35 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு - திமுக கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் அவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு தன்னிடம் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையில், முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் சகோதரர் கைதான நரேஷ்-ஐ நேரில் சந்தித்துள்ளதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய இளையராஜா, தன்னைத் தொடர்புக்கொண்டவர்கள் பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஓர் அமைச்சரிடம் பேசியிருப்பதாக கூறியதால், விவகாரத்தை கட்சித் தலைமையின் கவனத்திற்கும் காவல்துறையின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், செய்தியாளர்களிடம் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு