கைபேசி தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

காணொளிக் குறிப்பு,
கைபேசி தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்

வாலுஜ் வளாகத்தில் உள்ள திஸ்காவ் பகுதியில் உள்ள 'கவாத்யா டோங்கர்' மலையில் தற்கொலை செய்துகொள்ள மலையின் விளிம்பிற்குச் சென்ற இளைஞரையும், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது தந்தையும் உயிரிழந்தனர். மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயும் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் முரளிதர் தாமோதர் சந்த்குடே, சங்கீதா முரளிதர் சந்த்குடே மற்றும் குணால் முரளிதர் சந்த்குடே ஆகியோர் அடங்குவர்.

முதற்கட்டத் தகவல்களின்படி, குணால் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் அந்த மலைக்குச் சென்றிருந்தார். தகவல் கிடைத்ததும் காவல்துறை, சிவில் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குணாலைக் காப்பாற்ற, மலையின் அடிவாரத்தில் வலை விரித்து மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும், குணால் அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டிருந்ததால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், மகனைக் காப்பாற்ற முயன்றபோது தந்தை முரளிதர் சந்த்குடே உயிரிழக்கும் அபாயகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டார். அந்தச் சூழலைக் கண்ட தாய் சங்கீதா, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு