You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வடை முதல் ஜிம் வரை - தமிழகத்தில் நூதனமாக வாக்கு சேகரிப்பு
காணொளி: வடை முதல் ஜிம் வரை - தமிழகத்தில் நூதனமாக வாக்கு சேகரிப்பு
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வடை சுட்டு, இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூரில் பிரசாரத்தின்போது ஸ்கூட்டரில் அமர்ந்து சென்று தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேலூரில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஒரு கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்தார்.
பெரியகுளத்தில் விசிக வேட்பாளர் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு