காணொளி: ஒரே வானவில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வெவ்வேறு வடிவில் தோன்றும் என்று தெரியுமா?
ஒரு வானவில், உங்கள் பார்வைக்கும், உங்கள் நண்பரின் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை. ஏன் தெரியுமா?
உங்களுக்குப் பின்னால் சூரியனும் முன்பாக மழையும் இருக்கையில், சூரியன் நேரெதிரே உள்ள புள்ளியில் இருந்து 42 டிகிரி கோணத்தில் வானவில் தோன்றுகிறது.
வெண்மை நிற சூரிய ஒளி பல்வேறு நிறங்களால் ஆனது. அவை மழைத்துளிகள் வழியாக ஊடுருவும்போது வெவ்வேறு விதமாக வளைகின்றன.
ஒவ்வொரு நிறமும் சற்று மாறுபட்ட கோணத்தில் வெளிப்பட்டு, வானவில்லை உருவாக்குகிறது.
உங்கள் நண்பர் உங்களுக்கு இடது அல்லது வலது புறத்தில் ஓர் அடி தள்ளி நின்றால், ஒளியின் கோணம் மாறுபடும். அதனால், வானவில் இருவருக்கும் வெவ்வேறு விதமாகத் தெரியும்.
ஒருவேளை நண்பர் உங்களைவிட உயரமாகவோ, உயரம் குறைவாகவோ இருந்து, இருவரும் ஒரே இடத்தில் நின்று இருந்தாலும்கூட இவ்வாறுதான் வேறுபட்டுத் தெரியும்.
அந்த வித்தியாசம் சிறியதாக, நீங்கள் கவனிக்க இயலாத வகையில்கூட இருக்கலாம். ஆனால் வேறுபாடு நிச்சயம் இருக்கும்.
வானவில் தோன்றுவது என்பது உங்கள் கண்களுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு தனித்துவமான ஒளிசார் நிகழ்வு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



