அதிகமாக தூங்கினால் பரிசு - ஜப்பானில் நடந்த விசித்திர போட்டி
அதிகமாக தூங்கினால் பரிசு - ஜப்பானில் நடந்த விசித்திர போட்டி
பிரசுரிக்கப்பட்டது
ஜப்பானில் அதிக நேரம் தூங்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவருக்கு 14 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூளை அலைகளைக் கண்காணிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.
இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதும் இதன்மூலம் கண்டறியப்பட்டது. 'கோலா ஸ்லீப்' என்ற மெத்தை தயாரிக்கும் நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



