கோவை அருகே மேற்கூரையில் தலைமை காவலருடன் 40 கிமீ சென்ற கார்

காணொளிக் குறிப்பு, காணொளி: காரின் மேற்கூரையில் இருந்தபடி 40 கிமீ சென்ற தலைமைக் காவலர்
கோவை அருகே மேற்கூரையில் தலைமை காவலருடன் 40 கிமீ சென்ற கார்
பிரசுரிக்கப்பட்டது

கோவை அருகே காரின் மேற்கூரையில் ஆபத்தான நிலையில் தலைமை காவலர் ஒருவர் சென்ற காட்சி வெளியாகியுள்ளது. விலாங்குறிச்சியில் வாகன சோதனையின் போது பாதியிலேயே திடீரென புறப்பட்ட காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் ஏறியுள்ளார். அதனை பொருட்படுத்தாமல் காரில் இருந்த நபர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.

அந்த காரை துரத்திச் சென்ற போலீசார் சுமார் 40 கிமீ தொலைவில் அவிநாசியில் அதனை மடக்கினர். காருடன் அதில் இருந்த சுமார் 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு