கண்ணீர் விட்ட மெஸ்ஸி: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, இறுதிப் போட்டிக்குப் பிறகு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மெஸ்ஸி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இறுதிப்போட்டியின் கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த கோல் உதவியால், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

நாக்-அவுட் சுற்றுகளில் எகிப்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் இருந்து பின்னர் மீண்டெழுந்து வந்து அர்ஜென்டினா வென்றது. ஆனால், இறுதிப்போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினாவில் அதனைச் சாதிக்க முடியவில்லை. இதனால், இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி ஆடவர் உலகக் கோப்பையை வென்றது.

ஒரே நேரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை அவர்கள் பெறுகிறார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹெலிகாப்டரில் நியூ ஜெர்சிக்கு வந்தார். அதே நேரத்தில், ஷகிரா, மடோனா மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் உலகக் கோப்பை இடைவேளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அது 27 நிமிடங்கள் வரை நீடித்தது.

போட்டியின்போதும் போட்டி முடிந்த பிறகும் ஸ்பெயின் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இருந்தனர். இந்தப் போட்டியின் முக்கியமான தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, பரிசளிப்பு விழாவில் உலக கோப்பையை ஏமாற்றத்துடன் நோக்கும் மெஸ்ஸி
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, பாடகி ஷகிராவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக கோப்பை கால்பந்து, பிடிஎஸ்
படக்குறிப்பு, தென் கொரியாவின் பிடிஎஸ் குழுவினர்
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, இடைவேளையின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், அரங்கைச் சுற்றிலும் வாணவேடிக்கைகள் முழங்க, அந்த அரங்கம் வண்ணமயமாகக் காட்சியளித்தது.
உலக கோப்பை கால்பந்து, டாம் க்ரூஸ்
படக்குறிப்பு, மக்களை ஒன்றிணைக்கும் கால்பந்தின் ஆற்றல் குறித்து ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பேசினார்.
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, பிரேசில் ஜாம்பவன்கள் ரொனால்டினோ மற்றும் ரொனால்டோ உடன் பாடகி மடோனா
உலக கோப்பை கால்பந்து
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, ஸ்பெயினின் ரோட்ரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியாளர் கோப்பையைப் பெறுகிறார்.
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, மங்கோலியாவில் கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியைக் காண திரண்டிருந்த ரசிகர்கள்
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, ஹாங்காங்கில் ஸ்பெயினின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, காஸாவில் உலக கோப்பை இறுதிப் போட்டியைக் காண திரண்டிருந்த ரசிகர்கள். ஸ்பெயின் கொடியை போர்த்தியபடி ரசிகர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீரர் லமைன் யமால் தனது இளைய சகோதரருடன் கொண்டாடும் காட்சி
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, லியோனல் மெஸ்ஸி மற்றும் ஸ்பெயின் வீரர் லமைன் யமால்
உலக கோப்பை கால்பந்து
படக்குறிப்பு, ஸ்பெயின் உடனான தோல்விக்குப் பிறகு அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர்விட்டு அழுதார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு