காணொளி: கால்பந்து அணியில் 11 வீரர்கள் இடம்பெறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, கால்பந்து அணியில் 11 பேர் இருப்பது ஏன்?
காணொளி: கால்பந்து அணியில் 11 வீரர்கள் இடம்பெறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனை சேர்ந்த பல கால்பந்து அணிகள், முதலில் கிரிக்கெட் கழகங்களாக இருந்தவை. கிரிக்கெட்டில் ஒரு அணியில் 11 வீரர்கள் இருப்பதால், அந்த மரபு கால்பந்துக்கும் தொடர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மற்றொரு விளக்கம் என்னவென்றால், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கால்பந்து விளையாடிய மாணவர்கள், பொதுவாக 10 அல்லது 11 பேர் தங்கக்கூடிய விடுதி அறைகளில் தங்கியிருந்தனர்.

அறைகளுக்கு இடையிலான போட்டிகளில், ஒரு அறையில் இருந்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அணிகள் அமைக்கப்பட்டன. இதுவும் 11 வீரர்கள் கொண்ட அணியின் உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு