மழை வெள்ளத்தில் ஸ்தம்பித்த மும்பையின் நிலைமையை காட்டும் 10 புகைப்படங்கள்

மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, மும்பை மாநகரில் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு நடுவே உணவு டெலிவரி செய்யும் ஒருவர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மே 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இன்று (மே 27) இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும், கனமழை தொடரும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஷியஸாகவும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கும். இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடர்கிறது.

மே 28 முதல் மே 30 வரை மிதமான மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மும்பை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இனி.

மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, சியோன் பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் சூழந்த மழை வெள்ளம்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, இந்த மழையால், மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட வோர்லி மெட்ரோ ரயில் நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்தது.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை காலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மே 26 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, நேற்று மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, பாந்த்ரா-வோர்லி கடல் பகுதியில் மஹிம் கடற்கரை அருகே கடல் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, மஸ்கோவன் டாக் பகுதி அருகே உள்ள பிபிடி சாலையில் மே 25 அன்று பெய்த கனமழையில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ள காட்சி.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, சியோன் பகுதியில் உள்ள இந்தியா நகரில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் காட்சி
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, மும்பை வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, காந்தி மார்க்கெட்டில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட இரு சக்கர வாகனத்தை ஒருவர் வெளியே எடுக்க முயல்கிறார்.
மும்பை மழை, மும்பை வெள்ளம், மகாராஷ்டிரா
படக்குறிப்பு, மே 25 அன்று மும்பையில் பெய்த கனமழை நகரை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு