You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் எம்.பி. கனிமொழி பேசியது என்ன?
தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் என, திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். உடனடியாக அதை திரும்ப பெற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவதை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்கிறது.
தற்போதுள்ள 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் இன்று நடந்தது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து வந்திருந்தனர்.
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு